இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் பலி


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும் லக்னோவுக்கிடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது, அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று எரிபொருள் இன்றி நின்று போனமையினால் மாணவர்கள் கீழே இறங்கிய போது அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியதில் அந்த மாணவர்கள் உயிழிந்துள்ளனர்.

இந்த விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற பேருந்தையும், சாரதஜயையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers