Home இலங்கை “மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தரமாட்டோம்”

“மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தரமாட்டோம்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்தும் கூட்டணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எந்த ஆதரவை வழங்காது என அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கட்டாயம் போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியிருந்தமை தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கக் கூடாது என மக்கள் தெளிவாக கூறியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை வளர்த்த மக்களுக்கு எமது கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் துரோகம் செய்யாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More