கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 20 முறை கைப்பற்றி உலக சாதனைப் படைத்திருக்கும் ரோஜர் பெடரர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதனை குறிக்கோளாக கொண்டுள்ளார். பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 11-வது முறையாயாக சம்பியன் பட்டம் வென்ற நடால் முதல் இடத்தில் உள்ளார்.
புல்தரை போட்டிக்கு தயராகி வருகின்ற பெடரர் விரைவில் ஸ்டட்கார்ட் ஓபன் போட்டியில் கலந்து கொள்ளள்ளார். இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் முதல் இடத்தை பிடித்துவிடலாம் என்பதனால் எப்படியாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 36 வயதான பெடரர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment