Home பிரதான செய்திகள் தென்னாபிரிக்காவுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

தென்னாபிரிக்காவுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

by admin


தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 69 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.   இங்கிலாந்து சென்றுள்ள தென்னாரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது முதலாவது போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றநிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்ரிக்கா அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 332 ஓட்டங்கள் என்ற வெற்றி இலஙக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்மூலம் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சமனாக்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 15-ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More