இலங்கை பிரதான செய்திகள்

காங்கேசன்துறையில் கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில் இருந்து படகு மூலம் தொழிலுக்கு என்ற இருவரையும் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். காங்கேசன்துறை தையிட்டியை சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது 62) , டேவிட் ரேகன் (வயது 20) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

குறித்த இரு மீனவர்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தொழிலுக்கு சென்ற நிலையில் நேற்றைய தினம் மாலை வரை கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளமையால் படகு திசை மாறியிருக்கலாம் எனவும் , கடற்படையின் உதவியுடன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.