இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட் போட்டியிலிருந்து மத்தியூஸ் – லஹிரு விலகல்


மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் போட்டியில் இருந்து விலகி இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் அதேவேளை லஹிரு உபாதை காரணமாக நாடு திரும்புவதாகவும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் விளையாடமாட்டார்கள் எனவும் அவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.