இந்து சமய விவகார பிரதியமைச்சுக் குறித்து, திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தனக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநான் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுவாமிநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அது குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறித்த துறையின் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கும் அந்நியமனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சுகளை ஜனாதிபதியே நியமிக்கிறார். எனினும் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளேன். ஆகவே அது தொடர்பில் விரைவில் திருப்திகரமான பதில் ஒன்றை வழங்குவதாக அவர் எனக்கு தெரிவித்தார்.
Add Comment