பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி


லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் 47 ஓவர்களில் 214 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து 215 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்று எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு அருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers