குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேவைக்காகவே கதிர்காமம் கிரிவேஹெர விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரை சுட்டுக்கொல்ல முயற்சிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கதிர்காமத்தில் உள்ள வீடு தொடர்பான செய்திகளை தம்மிந்த தேரரே ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் இதன் காரணமாகே கோத்தபாய ராஜபக்ச அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவற்றில் கூறப்பட்டுள்ளன.
எது எப்படி இருந்த போதிலும் இந்த கொலை முயற்சியின் பிரதான சந்தேக நபர், கிரிவேஹெர விகாரைக்குள் இருக்கும் மகாசேனன் ஆலயத்தின் பிரதான பூசாரி என காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர நேற்று மாலை தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment