குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பசறையில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பசறையில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். பசறை நகரில் அமைந்துள்ள இந்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Add Comment