உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

நைக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு ஈரானிய கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் அதிருப்தி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவின் பிரபல விளையாட்டுப் பொருள் உற்பத்தி நிறுவனமான நைக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஈரானிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோஸ் கைரோஸ் ( Carlos Queiroz ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக நைக் நிறுவனம், வீரர்கள் அணியும் பூட்ஸ்களை வழங்க முடியாது என அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கைக்கு ஈரான் அணியின் பயி;ற்றுவிப்பாளர் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். பூட்ஸ்களை வழங்க முடியாது எனக் கூறிய நைக் நிறுவனம் ஈரானிய வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.