இந்தியா பிரதான செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளதனால் அவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்த போதும் அவை நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதியும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் ஜனாதிபதியே முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.