இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு…

Jun 15, 2018 @ 22:02

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA  தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில்  இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை மத ஆயுத குழுக்கள் என அமெரிக்காவின் சி ஐஏ வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ சர்வதேச நாடுகள் குறித்த ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தகவல்களை தம்முடைய இணையதளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

அண்மையில் இந்தியா குறித்த தகவல்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் அதிமுக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என பல கட்சிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  அதற்கு அடுத்ததாக அரசியல் அழுத்தம் தரும் குழுக்கள், தலைவர்கள் என ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குரியத் மாநாட்டு கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்கிறது.

பஜ்ரங்க் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை மத ஆயுதக் குழு (militant religious organization) என வகைப்படுத்தியுள்ளது.மதானியின் ஜாமியாத் உலெமா இ ஹிந்த், ஒரு மத அமைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு தேசியவாத இயக்கம் என்கிறது.

பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை மத ஆயுத குழுக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு பாஜக தலைவர்களும் இந்துத்துவா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வை அல்லாமல் இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள், வெளிநாடுகளை தளமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் என்கிற பட்டியல்களையும் சிஐஏ ஃபேக்ட் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தளமாக கொண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன், இந்தியன் முஜாஹிதீன், ஐஎஸ்ஐஎஸ் ஆகியவை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவை வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap