எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்காது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், மைத்திரிபால சிறிசேனவே எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் எந்த தரப்பினரும் சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment