உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்பு


இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் ஒருவரை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னா தீவில் உள்ள கிராமம் ஒன்றில் 51 வயதான வா திபா என்பவரையே இவ்வாறு மலைப்பாப்புக்கு விழுங்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக சென்ற வா திபா காணாமல் போயிருந்த நிலையில்  அவரை தேடிய உறவினர்கள் தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது அங்கு ராட்சத மலைப்பாம்பு ஏதோ இரையைத் விழுங்கிவிட்டு நகர முடியாமல் படுத்திருப்பதை அவதானித்தனர்.

இதனையடுத்து அந்த மலைப்பாம்பை கொன்று அதன் வயிற்றுப்பகுதியைக் கிழித்துப்பார்த்த போது திபா சடலமாக காணப்பட்டுள்ளார்.  குறித்த மலைப்பாம்பு 23 அடி(7.5 மீட்டர்) நீளம் உடையது எனவும் இதுபோன்ற ராட்சத மலைப்பாம்பை தாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers