ஜெர்மனியில் நடைபெற்று வருகின்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டி ஒன்றில் ரோஜர் பெடரர், அவுஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசுடன் போட்டியிட் நிலையில் 6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் பெடரர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனையடுத்து மற்போது முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் 2-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.பெடரர் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment