சினிமா பிரதான செய்திகள்

விஜய், அஜித், சூர்யா, விஷால் – தீபாவளியில் மோத இயலுமா முன்னணி நாயகர்களின் 4 படங்கள்?


எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. விஜய் 62, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே முதலிய திரைப்படங்களுடன் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படமும் வெளியாக உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தின்போது மாத்திரமே அஜித், விஜய், சூர்யா, விஷால் என்று நான்கு முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாகின்றன. வழக்கமாக அஜித், விஜய், சூர்யா, விஷால் இவர்களில் ஏதாவது இரண்டு நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிகழ்வே நடந்துள்ளது.

இந்த ஆண்டு விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் சிவா கூட்டணியில் தயாராகும் `விஸ்வாசம்’, சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் `என்ஜிகே’ படம் ஆகியவை தீபாவளி தினமற்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விஷால் நடிப்பில் உருவாகும் `சண்டக்கோழி 2′ படத்தையும் தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை என்ற நிலையில் சில திரைப்படங்கள் பிந்தி வெளிவரலாம் என்றும் கூறப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.