இலங்கை பிரதான செய்திகள்

மல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் எனும் இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மல்லாகம் பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.