இலங்கை பிரதான செய்திகள்

ஆவாகுழுவை சேர்ந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆவாகுழுவை சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்திய போது அவர்கள் விபத்துக்கு உள்ளான நிலையில் தப்பி சென்று உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கொக்குவில் சந்திக்கு அருகில் காவல்துறையினர் மறிக்க முற்பட்ட போது , மோட்டார் சைக்கிளை நிறுத்தாது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்ற இருவரையும் காவல்துறையினர் துரத்தி சென்ற வேளை யாழில் இருந்து கொக்குவிலை நோக்கி வந்து கொண்டிருந்த காருடன் கொக்குவில் சந்தியில் மோதி இளைஞர்கள் இருவரும் விபத்துக்கு உள்ளானர்கள்.குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்துக்கு உள்ளானதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண காவல்துறையினர்;; , விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் ஆவா குழுவினருடையது எனவும் , தப்பி சென்ற இருவரும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.