Home இலங்கை யஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…

யஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…

by admin


யஸ்மின் சூக்காவின் தலைமையிலான உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் அமைப்பு தங்களிடமுள்ள காணாமல்போனோர் குறித்த பட்டியலை இலங்கையின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது

உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் அமைப்பின் இணையத்தளத்தில் காணாமல்போனோர் குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் குறித்து தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை காணாமல்போன 351 பேரின் விபரங்கள் இந்த பட்டியலில் உள்ளதாக குறிப்பிட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ளவர்களிடம் காணாமல்போனவர்கள் குறித்த விபரங்கள் இருந்தால் அதனை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது

மேலும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களையும், அவர்கள் எவ்வாறான சூழ்நிலையின் கீழ் காணாமல்போனார்கள் என்பது குறித்த தகவல்களையும் காணாமல்போனோர் அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More