டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார். ராகுல் காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் மாநில குழு அண்மையில் அறிவித்துள்ளநிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்pப்பின் போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment