இங்கிலாந்திற்கு எதிரான தோல்விகளையடுத்து அணியில் மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் (Justin Langer ) தெரிவித்துள்ளார் . இங்கிலாந்தின் வெற்றி தற்செயலாக நடந்தது அல்ல எனவும் முதலிடத்தில் உள்ளனர் எனவும் தான் இதுபோன்றதொரு போட்டியை பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களை கொண்ட தமது அணி இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெமரிவித்துள்ள அவர் இந்தப் போட்டியை விட மிகக்கடினமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். அணியில் அதிரடி மாற்றம் கொண்டு வர தான் விரும்பவில்லை எனவும் அணியை ஏதாவது ஒரு வகையில் கட்டமைக்க வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
Add Comment