இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. மன்னார் பிரதான பாலத்தடி கடற்கiயில் இன்று காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்த போது குறித்த வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் அதனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றார்.

குறித்த பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில அது ஒரு பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. குறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா?அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா? என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers