பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடனான 4-வது ஒருநாள் போட்டியிலும் வென்று இங்கிலாந்து 4-0 என தொடரை கைப்பற்றியுள்ளது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்த்தினை தெரிவு செய்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.; ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தெரிவு செய்யப்பட்டார். தொடரை இங்கிலாந்து 4-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap