இலங்கை பிரதான செய்திகள்

லசந்தவின் கொலை தொடர்பாக ஜெயந்தவிடம் விசாரணை…..

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை புலனாய்வுப்பிரிவு இன்று விசா­ரணை செய்­ய­வுள்­ளது. அதன்­படி ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை இன்று முற்­பகல் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னாள் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம், லசந்த கொலையின் பின்னர் சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை, லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவ­காரம் தொடர்பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப­ட­வுள்­ள­தாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap