இலங்கை பிரதான செய்திகள்

வவுனியா பல்கலை, புகுமுக மாணவர்களின் மொட்டையடிப்பு – சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை….

வவுனியா பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக புகுமுக மாணவர்கள் 25 பேர் ‘பகிடிவதை’ காரணமாக சிரேஸ்ட மாணவர்களின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைதினம் (21.06.2018) மொட்டையடித்துக் கொண்ட சம்பவத்தின்  பிரதிபலிப்பாகவே  பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் நுழைய சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை, இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள், வவுனியா வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பல்கலைக்கழகத்தின் தலைமையால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலை சிரேஸ்ட மாணவரின் அடாவடித்தனமும், சிகையலங்காரியின் மனிதாபிமானமும்..

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap