பிரதான செய்திகள் விளையாட்டு

கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது

 

துபாயில் நேற்றையதினம் ஆரம்பமாகிய கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வென்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நேற்று ஆரம்பமாகியிருந்தது.

அறிமுக போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் போட்டியிட்ட நிலையில் நாயணச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதல் பாதிநேர போட்டியில் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. பாகிஸ்தான் அணி முதல் பாதிநேர போட்டியில் ஒரு இந்திய வீரரையும் பிடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர போட்டியில் இந்தியா 14 புள்ளிகளும், பாகிஸ்தான் 11 புள்ளிகளும் எடுத்த நிலையில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியா இன்று தனது இரண்டாவது லீக் போட்டியில் கென்யாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers