படப்பிடிப்பின் போது நடிகர் தனுசுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’ படத்துக்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கின்றார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் டோவினோ தாமசுக்கும் தனுசுக்குமிடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக தனுசுக்கு வலது காலிலும், இடது கையிலும் அடிபட்டு விட்டதாகவும் உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Add Comment