உலகம் பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவின் ரியாத் நோக்கி சென்ற  ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது…

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி சென்ற  ஏவுகணையை, தமது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அயல்நாடான ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால், இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக சவூதி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில், ரியாத் நகரத்தைக் குறிவைத்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.