இலங்கை பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மஹியங்கனை – தெய்யத்தனகண்டிய வீதியின் தெல்தெனிய பிரதேசத்தில் இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவச் சிப்பாய் உயிரிழந்துள்ளார். கதிர்காமம் சிங்க கதிர்காமம் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கம்மெல்லசத்தர கல்னேவ பக்கமுன பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட பஸ்நாயக்க முதியன்சலாகே மஹேஸ் பஸ்நாயக்க என்ற 23 வயதான இராணுவச்சிப்பாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கிராந்துருகோட்டே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.