இலங்கை பிரதான செய்திகள்

சுழிபுரம் ஆறு வயது சிறுமி படுகொலை -எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் :

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளதுடன் சுழிபுரம் சந்தி வரை பேரணியாகவும் சென்று தமது எதிப்பினை வெளியிட்டுள்ளனர்.

6 வயதான சிவநேஸ்வரன் றெஜீனா என்னும் சிறுமியே வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.