குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நீதிமன்றின் அனுமதியை பெற்று இவ் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம் இடம்பெற்றது. அண்மைக்காலமாக வன்னியின் பல இடங்களில் இவ்வாறு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Add Comment