இலங்கை பிரதான செய்திகள்

‘மது போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – மன்னாரில் விழிப்புணர்வு பேரணி-(வீடியோ)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வதேச மது,போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விழிப்புணர்வு பேரணி இடம் பெற்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் அனுசரனையுடன்,மன்னார் திருப்பு முனை புது வாழ்வகத்தின் ஏற்பாட்டில் ‘மது போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ எனும் கருப்பொருளில் குறித்த விழிர்ப்பணர்வு பேரணி இடம் பெற்றது.

குறித்த விழிர்ப்புணர்வு பேரணியானது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று ஆண்டாங்குளம் பொது மண்டபத்தை சென்றடைந்தது.-குறித்த பேரணியில் பாடசாலை மாணவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாந்தை மேற்கு பிரதேசச் செயலக அதிகாரிகள், மாதர்,கிராம அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.அதனைத்தொடர்ந்து விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers