சினிமா

ஷாருக்கான் தயாரிப்பில் நடிக்கும் அமிதாப்பச்சன்



பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், பிரபல நடிகர் ஷாருக்கான் தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அவரது  ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட்  என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஊடாகவே இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஷாருக்கான் தனது நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த திரைப்படங்களை தயாரித்துள்ளனர். முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார்.

பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் ஏற்கெனவே ‘பிங்க்’ படத்தில் நடித்துள்ளனர்.ஷாருக்கான் தயாரிப்பில் முதல் முறையாக அமிதாப் நடிப்பது, ‘பட்லா’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap