குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் செல்வநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,மேலும் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் சிறு வியாபாரியான மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பத்திரப்பன் சேது நம்பு (வயது-61) என தெரிய வந்துள்ளது. -மன்னார் நகரில் இருந்து நேற்று(26) செவ்வாய்க்கிழமை இரவு தாழ்வுபாடு நோக்கி பயணித்த குறித்த தனியார் பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எழுத்தூர் செல்வநகர் பகுதியில் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதி,பின் வீதிக்கரையில் உள்ள மதகுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பேரூந்தின் சாரதி இன்று புதன் கிழமை(27) காலை மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதி,எழுத்தூர் செல்வ நகர் பிரதான வீதியூடாக பயணிக்கும் அரச,தனியார் பேரூந்துள் அதி வேகத்துடன் செல்வதாகவும்,இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
Add Comment