Home சினிமா நாயகனாக அறிமுகமாகிறார் நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ்

நாயகனாக அறிமுகமாகிறார் நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ்

by admin


காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் மற்றும் நடனக் கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், ‘ஸ்கூல் கெம்பஸ்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

A.M.N. பைன் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் “ஸ்கூல் கெம்பஸ்” திரைப்படத்தினை A.M.N. குளோபல் குரூப் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஜே. ராம நாராயணா இயக்கி வருகிறார். இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கூறும் கதையாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கூறுகிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் பணியாற்ற படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்திற்கு தேவா இசை அமைக்கிறார். மேலும், பிரபல பாடகர்களான ஆஷா போஷ்லே, பி. சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பாலட்களைப் பாடியுள்ளனர்.

படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல், கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிப்பதுடன் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த திரைப்படம் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More