இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மனித எலும்பு அகழ்வு பணிகள் போதிய நிதியின்மையால் தாமதம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (28) வியாழக்கிழமை 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார்.

மேற்படி அகழ்வு ஆரம்ப பணிகளின் போது மனித வள பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டதால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றது. எனவே குறித்த அகழ்வு பணியை விரைவாக நடத்தி முடிப்பதற்காக இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருந்தும் வைத்திய நிபுணர்கள், பயிற்சி நிலை அதிகாரிகள் ,பேராசிரியர்கள் , பல்கலைகழக மாணவர்கள் , நகர சபை ஊழியர்கள் என பலரும் இணைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சந்தோகத்திற்கு உரிய விதமாக மனித எச்சங்கள் குறித்த வளாகத்தின் மையபகுதி மற்றும் நுழைவு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது. பகுதி அளவிலான எழும்பு கூடுகள் முழு மனித எலும்பு கூடுகள் என சந்தோகத்திற்குறிய விதமாக பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் முழு வளாகமும் அகழ்வு செய்ய வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

ஆனலும் தற்போது அழ்வு பணிகளை மேற் கொள்வதற்கும் அகழ்வு பணிகளில் மேலதிகமாக உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டு இணைக்கப்பட்டவர்களுக்கு உணவு , தங்குமிடம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை வழங்குவதற்கான போதுமான நிதி இன்மையால் குறித்த அகழ்வு பணியை தொடர்ச்சியாக கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான நிதி பங்களிப்பை ‘சதோச’ நிறுவனத்திடம் கோரியுள்ள போதும் இது வரை குறித்த நிறுவனம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை .எனவே குறித்த நிறுவனம் நிதி பங்களிப்பை செய்யாத பட்சத்தில் அகழ்வு பணியானது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என அறிய முடிகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers