சினிமா

அக்னி தேவ் படத்தில் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில்


ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாக இருக்கும் அக்னி தேவ் படத்தில் நடிகை மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பாபி சிம்ஹா நடிப்பில் கருப்பன், திருட்டு பயலே 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாபி சிம்ஹாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி தேவ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ளளனர். இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் நடிகை மதுபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மதுபாலா கடைசியாக தமிழில் துல்கர் சல்மானின்  வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap