இந்தியா பிரதான செய்திகள்

மும்பையில் விமானம் கட்டிடத்தின் மீது மோதி விபத்து – 5 பேர் பலி


மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் இன்று சிறியரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 5 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமானம் மோதிய வேகத்தில் உடைந்து சிதறி, தீப்பற்றிய நிலையில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினருக்கும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை விமானத்திலிருந்து 5 பேர் மீட்டு   மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானமானது உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers