இந்தியா பிரதான செய்திகள்

நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் 52 நாடுகளுக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, 355 கோடி  இந்திய  ரூபாசெலவிடப்பட்டுள்ளது.  நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார் சமூக ஆர்வலர் பிமப்பா கதத். அவரின், கேள்விகளுக்கு அலுவலகம் அளித்த பதிலை, பிரபல இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில், `நரேந்திர மோடி பதியேற்ற நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் . 48 மாதங்களில் 41 முறை வெளிநாட்டுக்கு அரசுமுறைப் பயணம் செய்துள்ளதாகவும் இவரின் பயணத்துக்காக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலத்தில் ஜேர்மனி, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக மாத்திரம்
31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமரின் சுற்றுப் பயணத்தில் அதிகம் பணம் செலவிடப்பட்ட சுற்றுப் பயணம் இதுவென்றும் அந்த இதழ் கூறுகிறது. அத்துடன் அயல் நாடான பூட்டானுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மோடி மேற்கொண்ட  பயணத்துக்காக மாத்திரம் ரூபாய் 2.45 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தனது நான்கு ஆண்டு பதவிக் காலத்தில் 165 நாள்களை இந்தியப் பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தில் கழித்திருக்கிறார். கிட்டத்தட்ட அரை ஆண்டு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணச் செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் ஆர்.டி.ஐ. தகவலில் குறிப்பிடப்படவில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.