வடிவேலு திரைப்படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் வடிவேலு – பார்த்தீபன் கூட்டணி திரைப்படங்கள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதுடன் காலத்தால் அழியாத நகைச்சுவைப்படங்களாகவும் நிலைத்துள்ளன. இந்த நிலையில் மிக நீண்ட காலத்தின் பின்னர் வடிவேலு – பார்த்தீபன் சிரிப்புக் கூட்டணி அமைய உள்ளது. சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், அப் படத்தில் தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றார்.
‘மன்னர் வகையறா’ ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விமல் தற்போது எழில் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் – வடிவேலு இருவரும் காவல்துறையாக நடிக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Spread the love
Add Comment