Home சினிமா மீண்டும் இணையும் கிருஷ்ணா – பிந்து மாதவி

மீண்டும் இணையும் கிருஷ்ணா – பிந்து மாதவி

by admin



இயக்குனர் சத்யசிவாவின் இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காதல் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம்உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இயக்குனர் சத்யசிவா இயக்க மீண்டும் கிருஷ்ணா – பிந்து மாதவி இணைந்து நடிக்கும் `கழுகு 2′ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த  யுவன் ஷங்கர் ராஜா  இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

முதல் பாகத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இந்த பாகத்திலும் இணைகின்றனர். எனினும் சில முக்கிய கலைஞர்கள் இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும் கூறப்படுகின்றது. கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மூணாரில் இன்று தொடங்கியிருக்கிறது. ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிங்கார வேலன் பிக்சர்ஸ் உலகம் முழுக்க ரிவெளியிட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More