பிரதான செய்திகள் விளையாட்டு

இன்றைய உலக கிண்ண கால்பந்து இறுதி லீக் போட்டிகள் – பெல்ஜியம் – துனிசியா- கொலம்பியா – போலந்து அணிகள் வெற்றி


ரஸ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி எச் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிரிவில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பனாமா அணிக்கும் துனிசியா அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வென்றுள்ளது. மற்றொரு போட்டியில் கொலம்பியாக்கும் செனகலுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

மேலும் ஜப்பானுக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் போலந்து 1 -0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap