Home இலங்கை வாகரை மாங்கேணி பாம் கொலனியில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது…

வாகரை மாங்கேணி பாம் கொலனியில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது…

by admin


மட்டக்களப்பு- வாகரை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட, மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த , 14, 15 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களை இன்று (29.06.18) வாகரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி ஆடுகளை மேய்க்கச் சென்ற, 12 வயது சிறுமியை, அதேப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு சிறுவர்கள் பின்தொடர்ந்து சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கபபட்ட சிறுமி பயம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (28.06.18) தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் உடனடியாக காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . இதனையடுத்து காவற்துறை சந்தேகத்தின் பேரில் 14,15 வயதுடைகளைடைய, இரண்ட சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவற்துறைநடவடிக்கை எடுத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More