உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியா – மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்பு – 75,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் அகுங்  (Mount Agung) வெடிக்கத் தொடங்கியுள்ளதனால் எரிமலைக்குழம்புகள் வெளியே வருவதால் பாலித் தீவின் 2,500 மீட்டர்வரை புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளன.

இந்த எரிமலை வெடிப்புக் காரணமாக 75,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்ததாகவும், மவுண்ட் அகுங் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டரில் வசிக்கும் மக்களை தற்காலிகமாக வேறு இடத்துக்கு செல்றுமாறும் இந்தோனேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் எரிமலை வெடிப்பு காரணமாக பாலியிலுள்ள விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சுற்றுலா பயணிகள் தீவுப் பகுதிகளிருந்து விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மவுண்ட் அகுங் எரிமலை கடந்த 1963-ம் ஆண்டு முதன்முதலில் வெடித்து சுமார் ஒருவருடம் தொடர்ந்து எரிமலைக்குழப்பை வெளியேற்றியதில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.