இலங்கை கட்டுரைகள்

“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்”

நாசமறுப்பான்..


மாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதிகாரம் குவிந்திருக்கிறது, பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு உரிமைகளை ஒருபொதும் வழங்க மாட்டாது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் புரட்சியில் புரல்கிறார்கள்..

1987ல் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் முதலமைச்சரின் ஆலோசனை இன்றி, அனுமதி இன்றி மாகாண சபைகளை ஆளுநர் கலைக்க முடியாது என இருந்த சட்டமூலத்தை, அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி றணசிங்க பிரேமதாஸவின் காலைப் பிடித்து, 1989ல் அந்த சட்ட மூலத்தை மாற்ற நாமே காரணமானோம்… அதன் மூலம் மத்திய அரசாங்கம் முதலமைச்சரின் ஆலோசனையை பெறாமல் மாகாண சபையை கலைத்தது… வரதராஜப் பெருமாள் நாட்டை விட்டு வெளியேறினார்..

அப்போதும் தமிழருக்கு மூக்குப் போனாலும் பாறவாயில்லை ஈபிஆர்எல்எவ் அமைப்பிற்கும், இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளுக்கும் சகுணம் பிழக்க வேண்டும் என நினைத்தார்கள். ஒவ்வாரு தடவையும் தொலை நோக்கு சிந்தனை இன்றி, தனி நபர் முரண்பாடுகளுக்கும், குழுசார்ந்த, அல்லது அமைப்பு சார்ந்த முரண்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் பலியாக்கப்பட்டுகொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய தீர்ப்ப்பும் தமிழ் அப்புக்காத்துவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது. செப்டம்பரில் கலைந்து போகப் போகும் மாகாண சபைக்யின் பதவிக்காக, தனிப்பட்ட விக்னேஸ்வரனை பழிவாங்குவதாக நினைத்து மற்றும் ஒரு வரலாற்றுத் துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஈழ விடுதலை இயக்கம், தமிழ் மாணவர்  பேரவையில் இருந்து இப்போதுவரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் எனக் கூறும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் வரவேற்று, விக்கியை பதவி விலகக் கோரியிருக்கிறார்…

முதலமைச்சரிடம் எஞசியிருக்கும் அதிகாரங்களையும் விட்டு வைக்கக் கூடாது… யாராவது உச்ச நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்து, ஆளுநரிடம் மாகாண சபையை ஆளும் முழுமையான அதிகாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இதற்கும் தமிழ் அப்புகாத்துமார் யாராவது முனைந்தால் தமிழ் மக்கள் இலங்கையின் மத்திய அரசின் கீழ் மகிழ்வாக வாழ பழகிக் கொள்வார்கள்…..

டெனிஸ்வரனை நீக்கியமைக்கு தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்…

4 Comments

Click here to post a comment

Leave a Reply to கிருஸ்ணா Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • சட்டப்படிதான் மாகாண சபையை ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைச்சர் டெனீஸ்வரனை சட்டப்படி பதவி நீக்கம் செய்யவில்லை என்றுதான் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. குற்றமற்றவர் என்று விக்னேஸ்வரன் அமைத்த ஆணைக் தீர்ப்பு எழுதியதை மீறி டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது தவறு. பின் எதற்காக இந்த இணைய தளம் ஒப்பாரி வைக்கவேண்டும்?

  • அமைச்சர் ஊழல் செய்தார் என்று நம்பி விக்னேஸ்வரன் அவரை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று நினைக்கின்றேன். தமிழர் தொடர்பான வழக்குகளில் சிங்கள நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று நம்ப முடியாது.

  • இக் கட்டுரை வரைந்தவரின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் இது Global Tamil News இனால் வரையப்பட்ட கட்டுரையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. Global Tamil News ‘நாசமறுப்பான்’ போன்ற அநாகரிக வார்த்தைப் பிரயோகத்துடன் கட்டுரையில் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருத்தல் வருத்தமளிக்கின்றது.
    1) 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய காலத்திலிருந்து இது வரை எந்த மாற்றங்களும் திருத்தங்களும் செய்யப்படவில்லை.
    2) நான் இளைஞர் பேரவையிலிருந்து அரசியல் ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இளைஞர் பேரவை தமிழ் அரசுக் கட்சியின் ஓர் இளைஞர் அணி. நான் ஒரு போதும் அதில் உறுப்பினராக இருக்கவில்லை. எனது அரசியல் ஆரம்பம் ஈழ விடுதலை இயக்கம், பொன். சிவகுமாரன், தமிழ் மாணவர் பேரவை ஆகியன ஆகும்.

  • புலிகளின் வேண்டுதற்கமைய வ.கி மா.சபை நாடாளுமன்றத்தால் கலைக்கப்பட்டது. சட்டம் மாற்றப்படவில்லை.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers