உலகம் பிரதான செய்திகள்

மைலென்டில் (Mile End) அடுக்குமாடி கட்டடத் தீ, கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது…

லண்டனின் கிழக்கு பகுதியில் மைலென்டில் (Mile End, east London.)  உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில்  இன்று மதியம் தீவிபத்து எற்பட்டது.

லண்டனின் கிழக்கு பகுதியின் மைலென்டில் (Mile End, east London.)    அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் இன்று  மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட  தொலைபேசி அழைப்பகள்  கிடைக்கப்பெற்றன.  இதனையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.

அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே  கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு சென்ற  தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டுள்ளனர். இந்த நிலையில்  நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின்  மேற்தளம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers