Home இலங்கை யாழ், சுழிபுரம் சிறுமி படுகொலை மேலும் இருவர் கைது…

யாழ், சுழிபுரம் சிறுமி படுகொலை மேலும் இருவர் கைது…

by admin

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சிறுமி படுகொலை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் 17, 18 வயதுடையவர்களாவார்கள். அத்துடன் இவர்கள் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்ப்வுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியான சிவநேஸ்வரன் றெஜீனா சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பிரதான சந்தேக நபரும், மற்றுமொரு நபரும் இணைந்து குறித்த சிறுமியை கொலை சம்பவம் நடந்த அன்றைய தினம் மாலை அழைத்து சென்றதனை கண்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ளவரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுவந்தநிலையில் நேற்று இரவு இருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More