இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரில் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய பேரூந்து தரிப்பிடம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் நகரில் அரச தனியார் பேருந்து தரிப்பிடங்களை ஒன்றிணைத்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து தரிப்பிடத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம் பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (4) புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.

அதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கயிலேயே மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,

நீண்ட காலமாக பராமரிப்பு செய்யப்படாமால் காணப்பட்ட மன்னார் பேருந்து தரிப்பிடம் மன்னார் நகர சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இலங்கை நகர அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் புதிய பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார் நகரத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து தரிப்பிடமானது மிகவும் அழகான முறையில் காட்சியளிக்கப்படவுள்ளது.

குறித்த பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நிதியானது நகர அபிவிருத்தி திட்டத்தினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதே தவிர வேறு எந்த அமைச்சினூடாகவும்,அல்லது அமைச்சர்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் எதிர்காலங்களில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் பல்வேறு வேளைத்திட்டத்தை நடை முறைப்படுத்தவுள்ளோம். -அதற்கான ஆவணங்கள் குறிப்பிட்ட திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னாரின் புதிய பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான ஒப்பந்த தாரர்களையும் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

-இன்னும் சில தினங்களில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.நகர திட்டமிடல் பணிப்பாளரினால் குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கான வரை படமும் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நகர முதல்வர் குறித்த வேலைத்திட்டமானது நகரத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாடாகவே கருத வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers