இலங்கை பிரதான செய்திகள்

அம்பாள்குளம் சிறுத்தை கொலை விவகாரம் – 10 பேருக்கு பிணை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை தாக்கி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பதான வழக்கு இன்றைதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐயாயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை பத்து பேரை தாக்கி காயப்படுத்தியிருந்ததனையடுத்து கிராம மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுத்தை இறந்ததனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.